பழுதடைந்த சவவண்டி

Update: 2022-07-19 17:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு சொந்தமான இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் சவவண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது இந்த சவவண்டி பழுதாகி இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல இயலாத நிலையில் உள்ளது. ஆகவே இந்த சவவண்டியை பழுது பார்த்து ஏழைகள் பயன்படுத்துகின்ற வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்