புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் பெருங்குடி விளக்கு ரோடு அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக சாலை ஆழமாக தோண்டப்பட்டு கான்கிரீட் கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றது . மிகப்பெரிய கலவை எந்திரங்கள் மூலம் சிமெண்டு ஜல்லி ஆகியவைகளால் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகின்றது. இந்த கான்கிரீட் பாலம் அமைக்கும் பணியின்போதும், கான்கிரீட் கலவை நடைபெறும் போதும் அரசுத்துறை அதிகாரிகள் அங்கு யாரும் இருப்பதில்லை. தொழிலாளர்கள் மட்டுமே இந்த பணியை செய்து வருகின்றனர். இதனால் முறையாக சிமெண்டு மற்றும் ஜல்லி கலவை நடைபெறுகின்றதா? அதனுடைய உறுதி தன்மை எவ்வாறு இருக்கும் என்பதில் ஐயப்பாடு ஏற்படுகின்றது. ஆகவே அப்பகுதியில் கான்கிரீட் பாலம் அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றால் தரம் வாய்ந்ததாக இருக்கும் என நம்புகிறோம். எனவே இந்த சாலை விரிவாக்கத்தை அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.