புதுக்கோட்டையில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை கூட்டம் கூட்டமாக வீடுகளுக்குள் புகுந்து உணவுகள், பழங்கள் போன்றவற்றை எடுத்து சென்று விடுகிறது. மேலும் மரத்தில் இருக்கும் பழம், காய்கள் போன்றவற்றையும் கடித்து குதறி சேதப்படுத்தி வருகிறது. இந்த குரங்குகள் வீட்டு பகுதியை தவிர போக்குவரத்து மிகுந்த சாலைகளை கூட்டம் கூட்டமாக கடக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகனங்கள் மீது தாவி கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.