வெறிநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2022-07-18 17:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் பகுதியில் வெறிநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரு ஆடு மற்றும் 3 பேரை கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்