புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் 2 துறைமுகங்கள் உள்ளன. இப்பகுதிக்கு தினமும் ஏரானமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் வார சந்தை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.