புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியை சுற்றி ராசாவயல் , பாலன் கிழக்கு மற்றும் மேற்கு, வடமலாப்பூர், ஐ.டி.ஐ.காலனி, கோவில்பட்டி, மருதுபாண்டியர் நகர், சிப்காட் நகர், திருவேங்கைவாசல் ஆகிய பகுதி மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தான் உள்ளது. இதனால் மேற்படிப்பிற்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே பாலன் நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.