வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாநகரில் சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கிடையில் சாலையின் இருபுறமும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட போக முடியவில்லை. அதுவும் திருப்பூர்-தாராபுரம் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் பள்ளியில் இருந்து மீனாட்சி மருத்துவமனை வழியாக தாராபுரம் ரோட்டிற்கு செல்லும் வழியிலும் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.