புதுக்கோட்டையில் நகரப்பகுதியில் சாலையில் பல இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சமீபத்தில் வேகத்தடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நகரப்பகுதியில் சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.