குமரன்சாலையில் சுரங்க நடைபாதை தேவை

Update: 2022-10-03 10:06 GMT

வளர்ந்து வரும் நகரங்களில் திருப்பூர் பிரதான இடத்தில் உள்ளது. இங்கு அனைத்து மாநில மக்களும் வசிக்கிறார்கள். ஜனநெருக்கடி மிகுந்தநகரம் என்பதால் திருப்பூர் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அதுவும் திருப்பூரில் பிரதான சாலைகளான குமரன்சாலை, காமராஜர்சாலை, பல்லடம் சாலை, அவினாசி சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, பெருமாநல்லூர் சாலை என அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் இடைவிடாமல் செல்லும். இதனால் சாலையை கடந்து மற்று பகுதிக்கு செல்வதும் கடினம். முயன்றால் விபத்து நிச்சயம். எனவே சாலையை பாதசாரிகள் கடப்பதற்கு சுரங்க நடைபாதை அவசியம்.


மேலும் செய்திகள்