நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நஞ்சுண்டாபுரம் பகுதியில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.