செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் அரசு சார்பில் இ சேவை மையம் இல்லாததால் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்கள் பெற விண்ணப்பம் செய்வதற்கு பொதுமக்கள் தனிநபர் வைத்துள்ள இ சேவை மையங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாலுகா அலுவலகத்திற்குள் இ சேவை மையம் அமைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.