நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் கால்நடை கிளை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் ஒரு பகுதியில் காம்பவுண்டு சுவர் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்த ஆஸ்பத்திரிக்கு காம்பவுண்டு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், கே.புதுப்பாளையம், நாமக்கல்.