தெப்பக்குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-23 16:40 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் இருந்து சற்று தொலைவில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெப்பகுளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்