நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி பகுதியில் இருந்து கழிவுநீர் வாய்க்கால் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் செல்கிறது. அந்த கழிவு நீர் வாய்க்கால் மிக சிறியதாக இருப்பதால் மழை காலங்களில் பேரூராட்சி பகுதியில் இருந்து வரும் மழைநீர், கழிவுநீர் வாய்க்காலில் வந்து ரெயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் அடிக்கடி தேங்கி விடுகிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தண்ணீர் வடியும் வரை நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ் கண்ணா, மோகனூர், நாமக்கல்.