கோவை வேடப்பட்டி வி.கே.எஸ். நகா் பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகஅளவில் உள்ளது. குறிப்பாக 5 பன்றிகள் ஒரே நேரத்தில் சுற்றி வருவதோடு, பொதுமக்களையும் விரட்டுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊருக்குள் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை வனப்பகுதியில் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.