கோவை நீலிக்கோணாம்பாளையம் வழியாக 43 எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று நிறுத்தப்பட்டதோடு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆட்டோக்களிலும், நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்வருவார்களா?