கோவை பீளமேடு ஏ.டி.காலனி 26-வது வார்டு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சண்டையிட்டபடி அந்த வழியாக வரும் பெண்கள், சிறுவர்கள் மீது விழுகிறது. ஒருசில நேரங்களில் அவர்களை கடித்துவிடுகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக 2 சக்கர வாகனங்களில் வருபவர்களை நாய்கள் விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடும் நிலை உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.