கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் இருந்து சர்ச் ரோடு வரை ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ஒன்றுக்கொண்டு சண்டையிட்டபடி பொதுமக்களை விரட்டுகிறது. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் அவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளையும் விரட்டுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.