நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெண்டாங்கி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்கூடம் ஒன்று கட்டப்பட்டது. அங்கு தற்போது சைக்கிள்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு சைக்கிள் நிறுத்தமாக (ஸ்டாண்டு) மாறி வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த நிழற்கூடத்தில் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, வெண்டாங்கி, நாமக்கல்.