ஆனைமலை பெரிய கடை வீதியில் சாக்கடை கால்வாயை சீரமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மண் மற்றும் கற்களை அகற்றி சாலையில் போடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் 2 சக்கர வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் நடக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
பார்த்தசாரதி, ஆனைமலை.