நாய் தொல்லை

Update: 2022-09-09 11:24 GMT


சுல்தான்பேட்டை அடுத்த காமநாயக்கன்பாளையம் நால்ரோடு சந்திப்பு பகுதியில் நாய்த் தொல்லை மிக அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் செல்லும் போது துரத்துகின்றன. குறிப்பாக வாகன ஓட்டிகளை விரட்டுவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே, காமநாயக்கன்பாளையம் வதம்பச்சேரி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பசாமி, சுல்தான்பேட்டை.

மேலும் செய்திகள்