கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பாப்பநாயக்கன்பாளையத்தில் அருந்ததியர் வீதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீணாக தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த தண்ணீர் குழாயை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.