கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால் பாளையத்தில் அரசு பள்ளியை சுற்றி சாக்கடை கால்வாய் உள்ளது. இதன் மேல்புறத்தில் போடப்பட்டு இருந்த மூடிகள் மீது மாணவ-மாணவிகள் நடந்து சென்று நடைபாதை போன்று பயன்படுத்தி வந்தனர். தற்போது கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்யும் பணிக்காக மூடிகள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக கால்வாய்க்குள் அவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயில் மூடிகளை பொருத்த வேண்டும்.