சுல்தான்பேட்டை, வடுகபாளையம், காமநாயக்கன்பாளையம், நல்லூர்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களில் இரவு நேரங்களில் அவ்வப்போது கால்நடைகள் மர்ம நபர்களால் திருடப்படுகிறது. இதனால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே திருட்டை தடுக்க சுல்தான்பேட்டை மற்றும் காமநாயக்கன்பாளையம் நிலைய போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.