கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் அருகே மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை வழியாக புரூக் பாண்ட் ரோட்டுக்கு செல்லும் பாதையில் மேம்பால தடுப்பு சுவரில் ஒரு மரம் வளர்ந்து வருகிறது. இந்த மரம், மேம்பாலத்தின் வலுவை இழக்க செய்யும் ஆபத்து நீடித்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தில் வளர்ந்து வரும் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.