போதை ஆசாமிகள் தொல்லை

Update: 2022-07-10 11:20 GMT

கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தூண்களுக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ள மேடை போன்ற அமைப்பில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகளவில் உள்ளது. அங்கு அவர்கள் போதையில் படுத்து உருள்கின்றனர். அப்போது ஆடைகள் விலகி அரை நிர்வாண கோலத்துக்கு மாறிவிடுகின்றனர். இது அங்கு வரும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்