நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

Update: 2022-08-25 12:40 GMT
சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி, மீதிகுடி, அனுப்பம்பட்டு, பின்னத்தூர், கொடிப்பள்ளம் ஆகிய கிராம விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்கின்றனர். ஆனால் இப்பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால், பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே கோவிலாம்பூண்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்