சுகாதார சீர்கேடு

Update: 2026-05-24 13:50 GMT

காளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. அதுவும் புதர்கள் சூழ்ந்த சாலையோரங்களில் சிலர் இரவு நேரங்களில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பை மேடாக பல இடங்கள் காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்