கோவையை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் சாலைகளும் பழுதாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. அத்துடன் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படுவது இல்லை. இதனால் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.