பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் வாய்க்கால் மேட்டூரில் கிழக்குக்கரை வாய்க்கால் மூலமாக வரும் நீரானது குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு, வெப்படை, சின்னார்பாளையம் வாய்க்கால் வழியாக வருகிறது. இந்த வாய்க்காலில் அதிகளவில் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் ஓடையாக மாறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் விவசாய நிலங்களில் நீரை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சின்னார்பாளையம்.