ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவரின் இருபுறமும் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது காகிதங்கள் மற்றும் மண் துகள்கள் அனைத்தும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்புச்சுவரின், இருபுறமும் தேங்கி உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.