சுகாதார சீர்கேடு

Update: 2024-12-15 16:46 GMT

நாமக்கல்-திருச்சி சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் நாகராஜபுரம் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அந்த குப்பைகள் அழுகி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்து செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்