நாமக்கல் முல்லைநகரில் ரெயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். எனவே இங்கு குப்பைகள் கொட்ட கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இருப்பினும் அதையும் மீறி சிலர் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது மழைக்காலம் என்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தி, கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.