கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, தளவாப்பாளையம் வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அள்ளப்பட்டு சாலையோரம் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.