கோவை பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில்ஸ் அருகே டி.பி.எப். தெருவில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் குப்பை என்ற நிலை உருவாகி உள்ளது. அந்த அளவிற்கு சாலையோரத்தில் குப்பைகளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதன் காரணமாக வெளியே செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், மீண்டும் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.