செங்கல்பட்டு மாவட்டம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிவாக்கத்தில் இருந்து தர்காஸ் செல்லும் சாலை ஓரத்தில் தனியார் குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இதன் அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குப்பை கிடங்கில் தினந்தோறும் காலை நேரத்தில் ஒயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தீ வைத்துக் எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.