தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-26 10:28 GMT

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கியநகர் 6-வது தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரைதேடி நாய்களும் அதிகளவில் வருகின்றன. இவை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், தேவையான இடங்களில் குப்பைத்தொட்டி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்