நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குஞ்சன்விளை, பரப்புவிளை, வெள்ளாளன்விளை ஊர்களுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு குஞ்சன்விளை வடக்கு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சேர்ந்த சிலர் குப்பைகளை இந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் கொட்டுகின்றனர். நாய்களும் ஆழ்துளை கிணற்றில் சிறுநீர் கழிக்கின்றன. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குடிநீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆழ்துளை கிணற்றை சுற்றி தொட்டி அமைத்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.