சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-03-03 16:07 GMT

மதுரை குலமங்கலம் மெயின் ரோடு கீழப்பனங்காடியில் உள்ள சாலை ஓரங்களில் ஓட்டல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இவற்றால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையோரங்களில் கொட்டும் குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்