தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் மீது குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் மழைநீர் வடிகால் பகுதி முழுவதும் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மழைக்காலத்தில் தண்ணீரும் வழிந்தோடாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதுமட்டுமின்றி குப்பைகள் குவிந்து கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.