கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியின் முன்பு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் சிரமத்து ஆளாகி வருகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.