குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-11-26 10:41 GMT

கோவை சவுரிபாளையம் ஜி.வி.ரெசிடென்சி சந்திப்பில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை தெருநாய்கள் சாலையில் சிதறடித்து விடுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்