தேனி சுப்பன் தெருவில், பங்களாமேடு திட்டச்சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசடைந்து, அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.