விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் ரெயில்வே பீடர் ரோட்டில் பள்ளி, ரெயில் நிலையம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இயங்கிவருகிறது. இந்த சாலையின் இருபுறமும் மண்மேடுகளும் குப்பைகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிக்கு வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.