தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-07-29 13:31 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலையில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக செங்கமல நாச்சியார்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட இப்பகுதியில் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே தேங்கி கிடக்கும் குப்பையை தூய்மை பணியாளர்கள் அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்