விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் முகவூர் பகுதியில் அம்பேத்கர் சிலை முதல் காமராஜர் திருமண மண்டபம் வரை திறந்தவெளியில் ஒரு சிலர் அசுத்தம் செய்கின்றனர். மேலும் பல்வேறு கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தினமும் இந்த வழியாக எண்ணற்ற பேர் சென்று வருகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.