விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை ஊராட்சியில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதை தவிா்க்க குப்பைகளை குறித்த நேரத்தில் அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் விழுப்புரம் மேல்தெருவில் குப்பைகளை மூட்டை கட்டி வைத்துள்ளனர். இதையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.