திண்டுக்கல் ரெயில்வே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இவற்றை மாடுகள் மேய்வதால் குப்பைகள் சாலையில் சிதறி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.