கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து ஆதிவாசிகள் நலசங்க மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மருத்துவமனை அருகே ஏராளமான குப்பைகளைக் கொண்டு வந்து சிலர் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோயாளிகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளதால், அப்பகுதியில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதைத் தடுத்து, அவ்வாறு கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.