குப்பை தொட்டி தேவை

Update: 2022-07-14 10:13 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக பின்புறம் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புக்களில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு அமைக்கப்பட்ட தொட்டி, சரிந்து கிடப்பதால் பொதுமக்கள் குப்பைகளை வெளியே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு வரும் காட்டுப்பன்றிகள் குப்பைகளை சிதறடித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு புதிய குப்பை தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்